நயன்தாரவுக்கு - ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பிறந்த நாள் பரிசு!


நயன்தாராவின் பிறந்தநாள் அன்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த பரிசு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
கோலிவுட்டின் முன்னணி நடிகையான நயன்தாரா நேற்று முன்தினம் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளையொட்டி இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோ பரிசு நயன்தாராவின் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ஹாக்கி உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு அதற்கான ஆந்தம் பாடலை தயார் செய்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
ஹாக்கி ஆந்தம் பாடல் ப்ரொமோ வீடியோவை ரஹ்மான் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சிவப்பு நிற சேலையில் வந்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
நயன்தாராவை அந்த வீடியோவில் பார்த்த ரசிகர்கள் இறுதியாக ரஹ்மான் வீடியோவில் தலைவி வந்துவிட்டார் என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முழு வீடியோவையும் பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.
Previous
Next Post »