உலகையே அதிரவைக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் ட்வீட்!


நடிகர் எஸ். ஜே.சூர்யாவின் ட்வீட் வைரலாகி வருகிறது. மெர்சல், ஸ்பைடர் திரைப்படங்களின் மிரட்டலுக்கு பிறகு, எஸ்.ஜே.சூர்யா ஏகபோகத்துக்கு பிசியாகிவிட்டார். அடுத்ததாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, மாயாவின் இறவாக்காலம் மற்றும் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், உலகமே அதிரக்கூடிய ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக ட்வீட் செய்துள்ளார். 
    எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்களை எடுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட் அல்லது பாலிவுட் படத்தில் நடிக்க போகிறீர்களா என ரசிகர்கள் கேட்கிறார்கள். என்னவென்று தெரிந்துகொள்ள இன்று மாலை வரை பொறுத்திருக்க வேண்டும்.
Previous
Next Post »