ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் - டுவீட்டில் கலாய்த்த நடிகர்

ஒரு ஊர்ல ஒரு ராஜா

 இனி ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னால் குழந்தைகளுக்கே பிடிக்காது என்று நடிகர் கருணாகரன் ட்வீட்டியுள்ளார்.
பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா போடும் ட்வீட்டுகளால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. அவர் ட்வீட்டிய கள்ளக்குழந்தை பிரச்சனை பெரிதானது.
இந்நிலையில் நடிகர் கருணாகரன் ஹெச். ராஜாவை கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.
ஹெச். ராஜாவின் நடவடிக்கைககளால் இனி குழந்தைகளுக்கு ராஜா கதை சொன்னால் பிடிக்காது என்கிறார் கருணாகரன்.
ஹெச். ராஜா மீது அதிருப்தி அடைந்துள்ள நெட்டிசன்கள் அவர் பெயரை வைத்து ஏதாவது ஹேஷ்டேக் உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்டாக்கிவிடுகிறார்கள். இன்று கூட அவர் பெயரில் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் என் குடும்பம் என்று மோடி கூறியதாக பிரதமர் அலுவலகம் ட்வீட்டியது. இதை பார்த்த கருணாகரன், சார் தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் சேர்க்காதீங்க என்று கமெண்ட் போட்டுள்ளார்.
இந்திய மக்கள் தொகை - 132 கோடி. தமிழ்நாட்டின் மக்கள் தொகை - 6.8 கோடி. அவர் ஏற்கனவே நம்மை சேர்க்கவில்லை போன்று என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
Previous
Next Post »