அப்பா வயது நடிகருடன் ஜோடியாக நடிக்கிறார் தமன்னா!


பாகுபலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்த தமன்னாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் மனதை தேற்றிக் கொண்டு தன்னை தேடி வரும் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அனில் ரவிபுடி வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோரை வைத்து தெலுங்கு படம் ஒன்றை எடுக்கிறார். அந்த படத்திற்கு எஃப் 2: ஃபன் அன்ட் ஃபிரஸ்டிரேஷன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எஃப்2 படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக தமன்னா நடிக்க உள்ளார். தமன்னா வெங்கடேஷுடன் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறை ஆகும். கதையை கேட்டதும் இந்த படத்தில் நான் நடிக்கிறேன் என்று தமன்னா இயக்குனரிடம் தெரிவித்தாராம்.
எஃப் 2 படத்தில் 2 ஹீரோயின்கள். இரண்டாவது ஹீரோவான வருண் தேஜுக்கு மெஹ்ரீன் பிர்சாதா ஜோடியாக நடிக்கிறாராம். படத்தில் காமெடி காட்சிகள் தான் ஹைலைட்டாம்.
இந்த படத்தில் மெஹ்ரீன், வருண் இதுவரை பார்த்திடாத அளவுக்கு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்களாம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.
Previous
Next Post »