ஆண் தேவதை' : ட்ரெய்லர் விமர்சனம்


தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, சுஜா வருணி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆண் தேவதை. படத்தின் ட்ரெய்லரை அசத்தலாக ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.
ட்ரெய்லரை பார்த்தவர்களுக்கு இப்போதே படத்தை பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. சமுத்திரக்கனி என்றாலே பொறுப்பாக நடிப்பார் என்று பெயர் வாங்கிவிட்டார். ஆண் தேவதை ட்ரெய்லரை பார்த்ததும் 'அப்பா' பட சமுத்திரக்கனி நினைவுக்கு வருகிறார்.
குழந்தைகள் நல்லபடியாக கஷ்டமின்றி வாழ வேண்டும் என்று கணவனும், மனைவியும் வேலை பார்க்கும் காலம் இது. நாம் வாழ்வதற்காக வேலை பார்க்கிறோமா இல்லை வேலை பார்ப்பதற்காக வாழ்கிறோமா என்று சமுத்திரக்கனி தனது மனைவியை பார்த்து கேட்கிறார்.
இன்றைய காலத்தில் பலர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் கேள்வியை தான் சமுத்திரக்கனி கேட்டுள்ளார். வேலை பார்ப்பதற்காக தான் வாழ்கிறோம் என்று பலருக்கும் கிடைத்த அதே பதிலை தான் சமுத்திரக்கனியும் கூறுகிறார்.
வேலைக்கு பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆண் தேவதை சமுத்திரக்கனி ஒரு நல்ல வழி சொல்லப் போகிறார். அந்த வழி என்னவென்று தெரிந்து கொள்ள படத்தை பார்த்தே ஆக வேண்டும். ட்ரெய்லரை பார்த்தாலே படம் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்று தெரிகிறது. வாழ்த்துக்கள் சமுத்திரக்கனி "அப்பா". உங்களை படத்தில் பார்க்கும்போது இப்படி ஒரு அப்பா நமக்கு இல்லையே என்று பல பிள்ளைகள் ஏங்குவது உண்மையே. பெண்களை தான் வழக்கமாக தேவதை என்போம். இங்கு சமுத்திரக்கனியின் செயல்களை பார்த்தால் அவரை ஆண் தேவதை என்று அழைப்பது தப்பே இல்லை.
Previous
Next Post »