சென்னையில் டிராபிக் ஜாம் செய்த - சமந்தா


சென்னையை அடுத்து உள்ள செங்குன்றத்தில் ஜி.என்.டி. சாலையில் கட்டப்பட்ட தனியார் வணிக வளாகத்தை நடிகை சமந்தா திறந்து வைத்தார். இந்த வணிக வளாக திறப்பு விழாவில் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ப்ரியங்காவும் கலந்து கொண்டார். சமந்தா வரும் தகவல் அறிந்து ரசிகர்களும், பொது மக்களும் அந்த வணிக வளாகம் முன்பு கூடிவிட்டனர்.காரில் இருந்து சமந்தா இறங்கியதும் அவருடன் செல்ஃபி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் ரசிகர்கள் முந்தியடித்தனர். அவருக்கு பாதுகாப்பாக வந்த தனியார் பாதுகாவலர்களும், போலீசாரும் ரசிகர்களை தடுத்தனர்.
எங்க சமந்தாவுடன் நாங்க செல்ஃபி எடுக்கக் கூடாதா என்று ரசிகர்கள் முந்தியடித்ததால் போலீசாருக்கும், ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாதுகாப்பு பணிக்கு குறைந்த அளவே போலீசார் வந்திருந்ததாால் அவர்கள் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள். இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

சமந்தாவை பார்க்க கூட்டம் கூடியதால் ஜி.என்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் எரிச்சல் அடைந்தனர்.
Previous
Next Post »