ஒத்த சொல்லால ரசிகர்களை சாய்த்த - சன்னி லியோன்

தனது மகளுக்காக நடிகை சன்னி லியோன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கதுவாவில் 8 வயது சிறுமியை கோவிலில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். அந்த பரபரப்பு அடங்கும் முன்பு குஜராத் மாநிலம் சூரத்தில் 9 வயது சிறுமியை சீரழித்து கொன்றுள்ளனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை பார்த்து பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர். பெண் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். 
இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது மகள் நிஷாவின் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, உன்னை இந்த உலகில் உள்ள தீங்கில் இருந்து பாதுகாப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். உன் பாதுகாப்புக்காக என் உயிரை கொடுப்பதாக இருந்தாலும் சரி. குழந்தைகளை பத்திரமாக பார்த்துக் கொள்வோமாக என்று தெரிவித்துள்ளார்.
Oldest